Saturday, August 16, 2008

நைனா நினைவுகள் - ஒரு சிறு முன்னுரை


எனக்கு அம்மாவழி மற்றும் அப்பா வழியே நான்கைந்து பெரியப்பாக்கள் இருந்தபோதும் இரண்டு பேர்களை மட்டும் நினைவுதெரிந்த நாட்களிலிருந்தே "நைனா" என்றுதான் அழைத்து வந்திருக்கின்றேன். அது என்ன காரணம் என்று தெரியவில்லை, ஒருவேளை எனது அண்ணன்கள் மற்றும் அக்காள்கள் (இரண்டு பெரியப்பாக்களின் வாரிசுகள்) நைனா என்று அழைத்து வந்ததன் பால்ய வயது பாதிப்பில் கூட இருக்கலாம் என்று நினைக்கிறேன். அந்த இருவரில் ஒருவர் "RR" என்று initial-லால் அறியப்பட்ட இராவணன் அவர்கள். அடுத்தவர் "இரும்புக் கடைக்காரர்" என்று அழைக்கப்பட்ட இராஜகோபால் அவர்கள். இருந்தும் இந்தக் கட்டுரையைப் பொறுத்தவரை, நான் குறிப்பிட்டிருப்பது, எனக்கு ஆசிரியரும் (ஒன்பதாம் வகுப்பில் வரலாறு+புவியியல் கற்பித்தவர்) நான் படித்த "அரசினர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி"யின் துணைத் தலைமையாசிரியருமான RR அவர்களைத் தான்.

சென்ற ஆண்டு தனது 78-ஆம் வயதில் காலமான RR நைனாவைப் பற்றிய நினைவுகள் சிலவற்றை என் ஞாபக அடுக்குகளிலிருந்து தொகுத்துள்ளேன்.

No comments: