Tuesday, May 27, 2008

அன்னையர் தினம் - 2008 மற்றுமொரு பதிவு

சென்ற பதிவைப் பார்த்ததும் என் மனைவி, இந்த வருடம் எழுதியதையும் பதிவு செய்ய அன்புக் கட்டளை இட்டதால் இதோ அதையும் பதித்து விடுகிறேன் :

உன்னில் விதைத்தாய்
உயிரை வளர்த்தாய்


மண்ணில் ஈந்தாய்

மழையாய்க் குளிர்ந்தாய்


இமைஎனக் காத்தாய்

இதயத்தில் வைத்தாய்


அன்பைப் பொழிந்தாய்

அகிலமாய் விரிந்தாய்


வாழ்க்கை கொடுத்தாய்

வளம்பெறச் செய்தாய்


இப்படி

அன்னையைப் பற்றி எழுதும்

அத்தனை வரிகளிலும்

வினைச் சொல்லாய்

விளங்கும் தாயே...

உனக்கென் அன்னையர் தின வாழ்த்துக்கள்..!!!

No comments: