Sunday, May 11, 2008

அன்னையர் தினம் - 2008

எனது முதல் பதிவை அம்மாவைப் பற்றி எழுதினால் என்ன அதுவும் அன்னையர் தினத்தன்று என்பதால் இந்தப் பதிப்பு. சென்ற வருடம் இதே தினத்தில் நான் எழுதிய குறள்கள் இரண்டை இங்கே பதிக்கிறேன் :

என்னிடம் கேட்டால் எதற்கிங்கு கோயில்என்பேன்
அன்னையே ஆலயம் தான்.

அமைந்தது எல்லாம் அவளால் அதனால்
சுமந்தவள் சொல்வதைக் கேள்.

நான் என் அம்மாவுக்காக இதை எழுதினாலும் எல்லா அம்மாக்களுக்கும் இது பொருந்தும். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்ட என் அம்மாவுக்கு நான் மனசுக்குள்தான் சொல்லமுடிந்தது. என் அம்மாவின் நினைவாய் எனது முதல் பதிவு அமைந்தது எனக்கு மகிழ்ச்சி.

அன்புடன்,
- பகலவன்

No comments: