சென்ற பதிவைப் பார்த்ததும் என் மனைவி, இந்த வருடம் எழுதியதையும் பதிவு செய்ய அன்புக் கட்டளை இட்டதால் இதோ அதையும் பதித்து விடுகிறேன் :
உன்னில் விதைத்தாய்
உயிரை வளர்த்தாய்
மண்ணில் ஈந்தாய்
மழையாய்க் குளிர்ந்தாய்
இமைஎனக் காத்தாய்
இதயத்தில் வைத்தாய்
அன்பைப் பொழிந்தாய்
அகிலமாய் விரிந்தாய்
வாழ்க்கை கொடுத்தாய்
வளம்பெறச் செய்தாய்
இப்படி
அன்னையைப் பற்றி எழுதும்
அத்தனை வரிகளிலும்
வினைச் சொல்லாய்
விளங்கும் தாயே...
உனக்கென் அன்னையர் தின வாழ்த்துக்கள்..!!!
Tuesday, May 27, 2008
Sunday, May 11, 2008
அன்னையர் தினம் - 2008
எனது முதல் பதிவை அம்மாவைப் பற்றி எழுதினால் என்ன அதுவும் அன்னையர் தினத்தன்று என்பதால் இந்தப் பதிப்பு. சென்ற வருடம் இதே தினத்தில் நான் எழுதிய குறள்கள் இரண்டை இங்கே பதிக்கிறேன் :
என்னிடம் கேட்டால் எதற்கிங்கு கோயில்என்பேன்
அன்னையே ஆலயம் தான்.
அமைந்தது எல்லாம் அவளால் அதனால்
சுமந்தவள் சொல்வதைக் கேள்.
நான் என் அம்மாவுக்காக இதை எழுதினாலும் எல்லா அம்மாக்களுக்கும் இது பொருந்தும். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்ட என் அம்மாவுக்கு நான் மனசுக்குள்தான் சொல்லமுடிந்தது. என் அம்மாவின் நினைவாய் எனது முதல் பதிவு அமைந்தது எனக்கு மகிழ்ச்சி.
அன்புடன்,
- பகலவன்

Friday, May 2, 2008
பகலவன் பக்கம்
வந்திருக்கும் நண்பர்களுக்கு வணக்கம்.. இது ஒரு சோதனை முயற்சி.. ("யாருக்கு" என்று நீங்கள் மனதுக்குள் கேட்பது எனக்கும் சற்றே கேட்கிறது :-))
விஷயங்களுடன் விரைவில் வருகிறேன்.. நன்றி.!
- பகலவன்
விஷயங்களுடன் விரைவில் வருகிறேன்.. நன்றி.!
- பகலவன்
Subscribe to:
Posts (Atom)